Menu

குமரப்பா,புலேந்திரன் அகிய தளபதிகளின் நினைவுத்தூபி அமைக்க யாழில் தடை.!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா மற்றும் புலேந்திரன் ஆகியோரின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் குமரப்பா, புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கு இன்று காலை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

இந்த நிகழ்வுகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதனை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
அத்துடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக கூறி, பொலிசார் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து இந்நிகழ்வை நிறுத்தி நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டதுடன் அடிக்கல் நாட்ட முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நீதிமன்றத்தின் உத்தரவை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரிடம் கொடுப்பதற்கு பொலிஸாரும் முயன்றுள்ளனர்.
இருப்பினும் அவர்கள் அதனைப் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனையடுத்து நீதிமன்ற அறிவித்தலை பொலிஸார் வாசித்துக் காட்டியபோது, சிவாஜிலிங்கம் மற்றும் தவிசாளர் ஆகியோர் காதுகளை மூடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Right Menu Icon