Menu

நாடு முழுவதும் கடும் மழை இதுவரை 4பேர் பலி..!!

நாடு முழுவதும் பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளினால், இதுவரை 8 இலட்சத்திட்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

அத்துடன் நாடு முழுவதும் 8 இலட்சத்து மூவாயிரத்து நானூற்று தொன்னூற்று ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்நிலையில் நாட்டில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும், மத்திய, ஊவா, சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

அத்துடன் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon