Menu

யாழ் சாவகச்சேரி மத்துவிலில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு..!!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

135 ஆவது மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ள நாவலர் கோட்டம் மாதிரிக் கிராம வீடுகளை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இன்று பொது மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார்.

 

இதன்போது மாதிரிக் கிராமத்திற்கான பெயர்பலகையை திரை நீக்கம் செய்து வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாச, குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகளையும் நாடாவெட்டித் திறந்து வைத்துள்ளார்.

 

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஆலோசனையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாட்டின் பல பகுதிகளிலும் மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதற்கமையவே 135 ஆவது மாதிரிக் கிராமமாக சாவகச்சேரியில் நாவலர் கோட்டம் எனும் மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon