Menu

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தினை மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்றால் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும்..!!

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாராயின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை மஹிந்த விரைவில் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றால் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதே, மத்திய செயற்குழுவின் நிலைப்பாடாகும் என்றும் ரோஹன லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட மாட்டார் என்ற அதீத நம்பிக்கை தமக்குள்ளதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அத்துடன் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை குழப்புவதற்கு பொது எதிரணியினர் பல்வேறு வகையிலும் நடவக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இதன் அடிப்படையிலேயே பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை மஹிந்த ராஜபக்ஸ ஏற்கவுள்ளதாக பொது எதிரணியினர் கருத்து தெரிவித்து வருவதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon