Menu

நாளைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி நடைபவனி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவிப்பு..!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் சிறைச்சாலை நோக்கி நடைபவனி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

 

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

அத்துடன், இந்த நடைபவணியில் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon