Menu

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து வெளிமாவட்ட மீனவார்கள் வெளியேறி வருகின்றனர்..!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தங்கியிருந்து கடலட்டை பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேறி வருகின்றனர்.

 

யாழ். மாவட்ட எல்லைப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை வெளியேறுமாறு பிரதேச செலரால் விடுக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு வெளியேறிவருகின்றனர்.

 

அந்த வகையில் பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு அவர்கள் வெளியேறுவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

 

கடந்த சில மாதங்களாக வெளிமாவட்ட மீனவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வரையில் வடமராட்சி கிழக்கில் அரச நிலங்களில் வாடிகள் அமைத்து தங்கியிருந்து கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon