Menu

நாட்டில் இந்து கோவில்களை அழித்து ஒருமைத் தன்மையை பேண சிலர் முயற்சிப்பதாக சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு.!!

நாட்டில் உள்ள இந்து கோவில்களையும், இஸ்லாமிய பள்ளி வாசல்களையும் அழித்து நாட்டின் ஒருமைத் தன்மையை பேண சிலர் முயற்சிப்பதாக, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது, சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

நாட்டின் பன்மை தன்மையையும் சுயாதீன தன்மையையும் ஐக்கியத்தையும் பாதுகாப்பது அனைவரினதும் கடமை என்றும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

 

 

சிலர் மதஸ்தலங்களை அழித்து நாட்டின் ஒருமைத் தன்மையை பாதுகாக்க சிலர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய சஜித் பிரேமதாஸ

 

 

எனினும் அனைவரது இதயத்திலும் இலங்கை தமது நாடு என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அத்துடன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீட்டுத்திட்டங்களுக்காக நிதியுதவிகளை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

அத்துடன், யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் 68 உதாகம்மான வீட்டுத்திட்டங்களை 200ஆக அதிகரிக்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

 

 

அத்துடன், இந்த வருடத்திற்குள் இந்த திட்டத்தினை நிறைவு செய்வதற்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon