Menu

புதிய அரசியலமைப்பை திருட்டுத்தனமாக நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி உதய கம்மன்பில குற்றச்சாட்டு..!!

நாட்டில் புதிய அரசியலமைப்பை அரசாங்கம் திருட்டுத்தனமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

 

திருட்டுத்தனமாக நிறைவேற்றப்படுகின்ற புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு 9 பிளவுகளாக பிரிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

 

லண்டன் வாழ் இலங்கைப் பிரஜைகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

20 ஆவது திருச்சட்டத்தை மக்கள் எதிர்ப்பார்கள் என்று அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரியும் என குறிப்பிட்ட உதய கம்மன்பில
இது சமஷ்டிக்கு வழிவகுக்கும் என்பதால் மக்கள் இதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால், இதனை பின்கதவு வழியாக கொண்டுவரவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இதுவே தமிழீழ விடுதலை புலிகளின் இலக்கு என தெரிவித்த உதய கம்மன்பில இதனை நிறைவேற்றவே தற்போது நல்லாட்சி அரசு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தமது தாய் நாடு இந்த அரசாங்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் உதய கம்மன்பில கவலை வெளியிட்டுள்ளார்.

 

எனவே இதனை தடுக்க தாம் போரட்டங்களை ஆரம்பித்தள்ளதாகவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon