Menu

இன்று கைது செய்யப்பட்டிருந்த விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை..!!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை குற்றவிசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 

இதன்போது 5லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

விஜயகலா மகேஸ்வரனை பிணையில் விடுவிக்க பொலிஸார் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில், தமிழ் மக்களின் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த விஜயகலா, கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon