Menu

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.!!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுது;துள்ளார்.

 

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தள்ளார்.

 

சீஷெல்சுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

அத்துடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு தொலைபேசியூடாக இது தொடர்பாக ஆலோசனையினை ஜனதிபதி வழங்கியுள்ளார்.

 

குறிப்பாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் மீட்புப் பணிகளுக்காக முப்படையினரும் ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon