Menu

பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்.!!

பார்முலா-1 கார் பந்தயத்தின் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லீவிஸ் ஹெமில்டன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

பார்முலா-1 கார் பந்தயத்தின் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் இங்கிலாந்து வீரரான லீவிஸ் ஹெமில்டன், முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா-1’ கார் பந்தய போட்டிகள், 21 சுற்றுகளாக நடைபெறுகின்ற அதேவேளை ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

 

அதன்படி நடப்பாண்டின் 17வது சுற்று போட்டியான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று போட்டி  சுசுகா ஓடுதளத்தில் இடம்பெற்றது.

 

இதில் முன்னூற்று ஏழு தசம் நான்கு ஏழு ஒன்று (307.471) கிலோ மீட்டர், பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

இதில் நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன்,
பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 27 நிமிடங்கள் 17.062 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

இந்த தொடரில் ஹெமில்டன் தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட நான்காவது வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பார்முலா-1 கார் பந்தயத்தின் 18-வது சுற்று போட்டிகள் அமெரிக்காவில் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon