Menu

ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பைக்கட்டுக்களில் விசம் கலக்கப்படவில்லை! நளின் பண்டார தெரிவித்துள்ளார்.!!

கடந்த மாதம் 5ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பைக்கட்டுக்களில் எந்த விதமான விசமும் கலக்கப்படவில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

 

கடந்த மாதம் 5ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பைக்கட்டுக்களில் அரசாங்கம் விசம் கலந்து விட்டதாக எதிரணியினர் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளின் போது பால் பைக்கற்றுக்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

 

இந்த அறிக்கைகளின் படி பால் பைக்கெட்டுக்களில் எந்த விதமான விசமும் கலக்கப்படவில்லை என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இன்று பதுளை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

கூட்டு எதிர்க்கட்சியினால் இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதனூடாக கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி தோல்வியில் முடிவடைந்தமை தற்போது தெரிய வருவதாகவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon