Menu

தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் ஆரம்பிக்க நரேந்திர மோடியிடம் வலியுறுத்தல்.!!

தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

டெல்லிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலேசனை நடத்தியுள்ளார்.

 

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் தமிழ் நாட்டிற்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் நிலவரம் மற்றும் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon