Menu

போர் குற்றச்சாட்டுகள் விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமற்றது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார.!!

போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமற்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் தற்போதைய நிலையில் போர் குற்ற விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என தாம் கருதவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்ததுடன்
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச வகிபாகத்திற்கு இணக்கம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் யூனியனில் பிரதமர் ரணில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அவருக்கு எதிராக வெளியில் ஆர்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon