Menu

ரெஜினோல்ட் குரேயிற்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.!!

லண்டனுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிற்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டள்ளது.

 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் இனப்படுகொலையினை முன்னெடுத்திருந்த அரசாங்கத்தின் கோர முகங்களை மறைக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே பொது நிகழ்வுகளில் பங்கேற்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

அத்துடன் இவ்வாறு இன படுகொலையினை அரங்கேற்றிய அரசாங்கத்தின் உண்மையான முகத்தினை மறைத்து, தமிழ் மக்களின் மனங்களை மாற்றுவதற்கான செயற்பாடுகளை ரெஜினோல்ட் குரே முன்னெடுத்து வருவதாகவும் புலம்பெயர் தமிழர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

இந்த அரப்;பாட்டத்தின் போது ‘இனப்படுகொலை சிங்கள அரசின் ஆளுநரே இலங்கைக்கு திரும்பிப் போ.. ..என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் கோசங்களை எழுப்பியுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனருக்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்படுகின்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon