Menu

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியின் உறவை முறிக்க வேண்டும் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு.!!

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமானால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, ஜக்கிய தேசிய கட்சி உடனான உறவை முறித்து கொள்ள வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் தற்போதைய நிலையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால்
முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

 

நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த வாசுதேவ நாணயக்கார
அதனால் மாற்று அரசாங்கம் ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon