Menu

கனடாவின் பிரம்டன் பகுதியில் பாரிய தீவிபத்து.!!

பிரம்டன் பகுதியில் உணவகம் ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டிருந்த அதேவேளை எவரும் பாதிக்கப்படவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

பிரம்டன் ரெம்கென் வீதி மற்றும் வில்கின்சன் வீதிக்கு அருகில் உள்ள வர்த்தக கட்டிட தொகுதியில் அமைந்துள்ள உணவகத்திலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவித்த தீயணைப்பு படையினர் அதிகளவான கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

அத்துடன் உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தானது அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியிருந்ததாகவும் தீயணைப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

கடுமையான போராட்டத்தின் பின்னர் தீவிபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தீப்பரவல் ஆரம்பித்த வேளையில், அங்கு பணியாளர்கள் யாரும் இருக்கவில்லை எனவும், எனவே இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த தீப்பரவலால் ஏற்பட்ட புகைமூட்டம் நெடுஞ்சாலை 410 இன் ஊடான போக்குவரத்துகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால், ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon