Menu

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.!!

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

எனவே புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான திட்டத்தை அரசாங்கம் எனும் ரீதியில் தாம் வகுத்து வருவதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

அதற்கிணங்க, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடமும் தாம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் புலம் பெயர் தமிழர்களும் இதற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளதாகவும சம்பிக்க ரணவக்க மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

 

எனினும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பம் தெரிவிக்கும் புலம்பெயர் தமிழர்கள், புலிகளுடன் தொடர்புடையவர்களா – இல்லையா என்பது குறித்து மத்திய வங்கி ஊடாக ஆராயப்படும் என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனினும் விடுதலைப் புலிகளுக்கு வாகனங்கள், மற்றும் தொலைப்பேசிகளை கடந்த காலங்களில் விற்றவர்கள், அவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க பணம் வழங்கியவர்கள் எல்லோரும் கொழும்பில் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருப்பதாகவும் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

 

அத்துடன் இலங்கையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு தாம் இடமளிக்க வேண்டும் என தெரிவித்த சம்பிக்க ரணவக்க
தமிழ் – சிங்கள பேதங்களை மறந்து, தாம் இந்த விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon