Menu

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். !!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கொங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

 

குஜராத் மாநிலத்தின் சபர் கந்தா மாவட்டத்தில் கடந்த 28ம் திகதி 14 மாத குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்யததாக கூறி பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தங்கியிருந்து தொழில் புரிகின்ற ஏனைய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

 

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையிலேயே ராகுல் காந்தி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

 

அத்துடன் குஜராத் அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், அதனால் ஏற்பட்ட வேலை இழப்புகள் ஆகியவையே அங்குள்ள வெளி மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு வழி வகுத்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

 

எனவே குஜராத்தில் அமைதி நிலைமை திரும்ப நடவடிக்கை எடுப்பதுடன், அங்குள்ள ஒவ்வொரு வெளிமாநிலத்தவரும் பாதுகாப்பாக வாழ வழி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon