Menu

ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் இருந்து நிக்கி ஹாலே ராஜினாமா செய்துள்ளார்.!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் இருந்து நிக்கி ஹாலே ராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் பதவியினை இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதுவரா இந்திய வம்சாவளி சேர்ந்த பெண்ணான நிக்கி ஹாலே கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

 

அமரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவின் ஆட்சிகாலத்தின் போது நிக்கி ஹாலே, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் 116-வது ஆளுனராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

எனினும் அவரது ராஜினாமாவுக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகாத நிலையில் நிக்கி ஹாலேயின் ராஜினாமாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கெண்டுள்ளதாகவும் அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon