Menu

2019 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்க்கபோவதாக தமிழ் தேசியகூட்டமைப்பு தெரிவிப்பு.!!

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க உள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்க்க போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

 

மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

தமிழ் அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருவதாக சிவசக்தி ஆனந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.

 

அதுமாத்திரமின்றி அவர்களில் சிலர் ஆறு, ஏழு வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இவ்வாறு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்
இல்லையேல், நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்க்கபோவதாகவும் எச்சரிக்கை விடுத்தள்ளார்.

 

அத்துடன் தன்னுடைய இந்த நிலைப்பாட்டிலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பும் செயற்படுவதாக சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டதில்
ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகசின் சிறைச்சாலையிலுள்ள 44 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon