Menu

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.!!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆவுஸ்திரேலிய அணி 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

 

பாகிஸ்தான் மற்றும் ஆவுஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துபாயில் கடந்த 7ம் திகதி ஆரம்பமாகியது.

 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியானது 482 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

இதனனை தொடர்ந்து தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த ஆவுஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடியில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை எடத்திருந்தது.

 

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமானது.
ஒரு கட்டத்தில் விக்கட் இழப்பின்றி துடுப்பெடுத்தாடி வந்த அவுஸ்திரேலிய அணி, 142 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, முதலாவது விக்கெட்டை இழந்தது.

 

இதனை தொடர்ந்து பாக்கிஸ்தானின் அறிமுக வீரரான பிலால் ஆசிவ்வின் சிறப்பான பந்துவீச்சினால் அவுஸ்ரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

 

இறுதியில் அவுஸ்ரேலியா அணி முதலாவது இன்னிங்சில் 202 ஓட்டங்களை மட்டும் எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

பாகிஸ்தானின் அறிமுக வீரரான பிலால் ஆசிவ் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளது.

 

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடியில் பாக்கிஸ்தான் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 45 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon