Menu

தமிழ்நாட்டில் காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தள்ளார்.!!

தமிழ்நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற 400 மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழ் மாநில கொங்கிஸ்சின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

 

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

 

இவ்விடையம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜி.கே வாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 400 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளதாகவும் ஜி.கே வாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் நவீன தொழில் நுட்பத்துடன் 24 மணி நேர தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டு மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் ஜி.கே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆன்லைனில் சிவகாசி பட்டாசு: 1000 வாலா வெறும் 6 ரூபாய்க்கு..?

உங்கள் சென்னை கிராக்கர்ஸ் ஆன்லைன் (Chennai Crackers...

Leave a Reply

Right Menu Icon