Menu

மழை காரணமாக கைவிடப்பட்டுள்ள முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் .!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளிற்கு இடையில், தம்புள்ளையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

 

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

 

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை பைஸ்டிரோ, நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.

 

மழை மற்றும் அதனால் மைதானத்தில் காணப்பட்ட ஈரநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் ஆட்டத்தை கைவிட்டது சரியான நடவடிக்கை என தெரிவித்த இங்கிலாந்து அணி வீரரான மோர்கன் வீரர்களின் பாதுகாபபே முக்கியமானது என்றும் தெரிவித்தள்ளார்.

லசித் மாலிங்கவின் சாதனை.!!

அனைத்து வகையிலான சர்வதேச கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon