Menu

வடகொரிய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை இடைநடுவில் விடமுடியாது தெரிவித்த டிரம்ப்.!!

அமெரிக்காவில் அடுத்த மாதம் 6-ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு பின்னர் வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தள்ளார்.

 

அமெரிக்க தலைநகரான வொசிங்டனில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

வடகொரிய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை இடைநடுவில் விடமுடியாது என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவடைந்ததும் தான் அவரை நிச்சயமாக சந்திக்க உள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

 

அடுத்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தற்போது 4 இடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவில் இடம்பெறுவதற்கும் சாத்தியம் உள்ளதாக டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon