Menu

தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிலர் தடுக்கமுயற்சி- பொன்.ராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு.!!

தமிழ்நாடு அபிவிருத்தி அடையக்கூடாதென ஒரு இயக்கம் செயற்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

தமிழ்நாடு எந்த துறையிலும் வளர்ச்சி அடைந்து விடகூடாது என்பதில் ஒரு கூட்டம் செயற்பட்டு வருவதாக பொன். ராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே பொன்.ராதாகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக குற்றசாட்டுகளை தெரிவிக்கின்ற அரசியல் வாதிகளின் கருத்துக்களை மக்களின் கருத்தாக ஏற்க முடியாது என்றும் பொன். ராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறு தமிழ் நாட்டு முன்னேற்றம் அடைந்து விடகூடாது என்று நினைப்பவர்களின் கருத்தாகவே இதனை கருத முடியும் என்றும் பொன். ராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon