Menu

யாழில் ஹெரோயின், கஞ்சாவுடன் மூவர் கைது.!!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உட்பட சில போதை பொருட்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிப்பிலி மயான பகுதியில் வைத்தே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருவரின் உடமையில் இருந்து 550 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும், மற்றைய நபரின் உடமையில் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

கைதான மூவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon