Menu

யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் சுமந்திரன் வேண்டுகோள்.!!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கான அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மோதல்கள் இடம்பெற்றபோது ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் யுத்த நிலைமைகளின் பின்னர் தாம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தமது நடவடிக்கைகள் பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இழப்பீடுகள் குறித்த அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் நிலையில் அவை அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon