Menu

முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 462 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.!!

ஆவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி இலக்காக 462 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

 

பாகிஸ்தான் மற்றும் ஆவுஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 7ம் திகதி துபாயில் ஆரம்பமாகியது.

 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியானது 482 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெடடுக்களையும் இழந்தது.

 

இதனனை தொடர்ந்து தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த ஆவுஸ்திரேலியா அணி 202 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடியில் பாக்கிஸ்தான் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 45 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

 

இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பமானது.
போட்டியின் போது 57.5 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை எடுத்திருந்தது.

 

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தலைவர் துடுப்பாட்டத்தை இடைநிறுத்தி கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் வெற்றி இலக்காக 462 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள அவுஸ்ரேலிய அணி இன்றைய ஆட்டநேர முடியில் 136 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon