Menu

20வது திருத்தச் சட்டமூலம் சட்டத்திற்கே எதிரானது-ஒன்றிணைந்த எதிரணி.!!

20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிலும், நாடாளுமன்றிலும் தோற்கடிப்போவதாக மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

20வது திருத்தச் சட்டமூலமானது சட்டத்திற்கு முரணானதென்றும் முடிந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்று காட்டுமாறும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா சவால் விடுத்துள்ளார்.

 

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் டி சொய்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

20ஆவது திருத்தச் சட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்தாலும், அதன் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்களே உள்ளதாகவும் ரஞ்சித் டி சொய்சா குற்றம் சுமத்தியுள்ளார்.

 

அத்துடன் இதற்கு அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களான எம்.சுமந்திரன் மற்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் துணை நிற்பதாகவும் ரஞ்சித் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய 20ஆவது திருத்தச் சட்டத்தை, மக்கள் விடுதலை முன்னணி கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon