Menu

கனடாவில் துப்பாக்கி சூடு ஒருவர் ஆபத்தான நிலை.!!

ரொறான்ரோவுக்கு அருகில் கலி டோனியா பயர் பாங் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

 

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது எலிங்டன் அவன்யூ மற்றும் டுவ்ரின் வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

 

 

தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவித்த பொலிசார் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது படுகாயமடைந்த நபர் குறித்த பகுதியிலேயே வசிப்பதாகவும் இரண்டு நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்தே சந்தேக நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

படுகாயமடைந்த 32 வயதுடைய ஆண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது உயிரிக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடப்படாத பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon