Menu

கனடாவில் தீவிபத்து ஐந்து வாகனங்கள் முற்றாக சேதம்.!!

ஸ்காபுரோவில் இடம்பெற்ற தீவிபத்தில் 5 வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

வாகன திருத்துமிடம் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீவிபத்து காரணமாகவே இவ்வாறு வாகனங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

எனினும் உயிராபத்துகக்கள் ஏற்படவில்லை என்றும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவமானது டன்போட் வீதி மற்றும் மிட்லாண்ட் அவன்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்க்பபடுகின்றது.

 

எனினும் இங்கிருந்த 5 பிக்கப் ரக வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

தீப்பரவலுக்கான காரணங்களை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், ரொறன்ரோ தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Right Menu Icon