Menu

தமிழ்நாட்டில் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது -தம்பிதுரை.!!

தமிழ்நாட்டில் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

 

ஆளுநர் மளிகை வழங்கிய முறைப்பாட்டின் அடைப்படையிலேயே நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தம்பிதுரை மேலும் தெரிவித்துள்ளார்.

 

கரூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் அவசியமானது என தெரிவித்த தம்பிதுரை எனினும் அதனை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் சுட்டிக்காட்டிள்ளார்.

 

பத்திரிகை சுதந்திரமானது தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்வதாகவும் தம்பிதுரை மேலும் தெரிவித்தள்ளார்.

 

அத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றதுடன் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளதாகவும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

 

அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும் தம்பிதுரை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அத்துடன் கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை முடிவெடுக்க உள்ளதாகவும் தம்பிதுரை மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon