Menu

தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை, தெரிவிக்கிறார் வெங்கய்ய நாயுடு .!!

தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

 

அதில் ஆயிரத்து 298 மாணவ மாணவிகளுக்கான பட்டங்களை வழங்கிய பின்னர் ஊரையாற்றும் போதே வெங்கய்ய நாயுடு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

தமிழும், தமிழ் நாடும் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை என்றும்
தாய் மொழியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

 

ஏனெனில் தாய் மொழி கண் போன்றது என்றும் ஏனைய மொழிகள் அனைத்தும் கண்களில் அணியும் கண்ணாடி போன்றது என்றும் வெங்கய்ய நாயுடு சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கிராமப்புற இந்தியாவை நகர்ப்புற இந்தியாவாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்தள்ளார்.

 

கிராமப்புற மக்களிடம் அதிகமான திறமைகள் உள்ளதாக தெரிவித்த வெங்கய்ய நாயுடு அவற்றை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியாவின் சனத்தொகையில் 65 வீதம் உள்ள இளைஞர்கள்,
ஊழல், மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக போராட வேண்டும் என்றும் வெங்கய்ய நாயுடு மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon