Menu

கனடாவில் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி.!!

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவமானது நோர்த் யோர்க்கின் கம்போர்ன் அவனியு, தல்ராய்த் வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

 

துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து தமது தகவல் வழங்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வாகனம் ஒன்றினுள் உயிரிழந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 5 துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

துப்பாக்கிச்சூட்டை நடத்திய இருவர் சாம்பல் நிற காரில் தப்பிச் சென்றுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon