Menu

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நான்காவது நாள் நடைபயணம் இன்று வவுனியாவில்.!!

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 4 ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணமானது இன்று வவுனியா நகரை சென்றடைந்துள்ளது.

 

ஓமந்தையிலிருந்து இன்று காலை ஆரம்பித்த நான்காவது நாள் நடை பயணமானது வவுனியா நகரின் ஊடாக மதவாச்சி நோக்கிய ஆரம்பமாகியுள்ளது.

 

நொச்சிமோட்டை கனிஸ்ட உயர் தர பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று வரவேற்றிருந்ததுடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் நடைபயணத்தில் இணைந்துள்ளார்.

 

நடைபயணமானது வவுனியா பசார் வீதி வழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தினை வந்தடைந்திருந்தபோது,
வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

 

இந்த நடை பயணமானது இன்று மதவாச்சி வரை பயணித்து தமது பயணத்தினை நிறுத்தி நாளை, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக நடை பயணத்தினை நிறைவு செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon