Menu

இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதற்கு விருப்பம் -ரஷ்ய ஜனாதிபதி.!!

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை பேணுவதற்கு விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தயான் ஜயதிலக்க நேற்று தனது நியமனக் கடிதத்தை ரஷ்ய ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

 

இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதேவிளாடிமிர் புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இலங்கையுடன் பாரம்பரியமான நட்புறவை ரஸ்யா பேணி வருவதாகவும்விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை பேணவும் விரும்புவதாகவும் விளாடிமிர் புட்டின் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இந் நிகழ்வில்,ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்,மற்றும் ரஷ்ய ஜனாதிபதியின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகரான யூரி உஷாகொவ் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon