Menu

ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல் -50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஹமத் நபியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்ற வேளை நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

முஹமத் நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாதுன் நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று கொண்டாடப்பட்டது.

 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் நேற்று மீலாதுன் நபி விழா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

 

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. அத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றபோது குறித்த மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon