Menu

25ம் திகதி மகளீருக்கான உலககிண்ண ரி20 போட்டியின் இறுதிப்போட்டி.!! புதிய தகவல்.!!

மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

ஆறாவது மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்தி தீவுகளில் நடைபெற்று வருகிறது.

 

இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் மேற்கிந்தி தீவுகள், அணி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

 

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ஓட்டங்கள், வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அவுஸ்ரேலியா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது

 

இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.

 

இதில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

 

அதிகபட்சமாக மந்தனா 34 ஓட்டங்களையும், ரோட்ரிகஸ் 26 ஓட்டங்களையும், கவுர் 16 ஓட்டங்களையும் எடுத்தனர்.

 

இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இதையடுத்து 113 ஓட்டங்கள், என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது.

 

ஆரம்ப் ஜோடி வியாட்-பீமான்ட் ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்த நிலையில் அதன் பின்னர் இணைந்த ஜோனஸ்-சிவர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

 

இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜோனஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon