Menu

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் 27 இராணுவம் பலி.!!

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகியுள்ள அதேவேளை 50 பேர் காயமடைந்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை குறிவைத்தே இந்த தாக்கதல் இடம்பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது 27 இராணுவீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

 

சம்பவத்தின்போது பல இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

நேற்றையதினம் இராணுவ வீரர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்க ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கானி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon