Menu

முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஸ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

பங்களாதேசுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மேற்கிந்தியதீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21ம் திகதி சிட்டாங்கொங் மைதானத்தில் ஆரம்பமானது.

 

நாணயசுழற்ச்சியில் வெற்றி பெற்றிருந்த பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதலாவது இன்னிங்சில் 324 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்தியதீவுகள் அணி 246 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

இதனடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 204 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

 

இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்தியதீவுகள் அணி பங்களாதேஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

 

இறுதியில் மேற்கிந்தியதீவுகள் அணி 35.2 ஓவர்கள் நிறைவில் 139 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்துள்ளது.

 

இதன்மூலம் பங்களாதேஸ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

இரண்டு போட்கள் கொண்ட தொடரில் பங்களாதேஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon