Menu

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அமெரிக்கா வரவேற்பு.!!

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள அமெரிக்கா பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையினை வரவேற்றுள்ளது.

 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ள அதேவேளை 3 பயங்கரவாதிகளை பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து சில மணி நேரங்களின் பின்னர் பாகிஸ்தானின் ஒரக்சாய் பகுதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய மற்றுமொரு வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா துணையாக இருக்கும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் உறுதியளித்துள்ளார்.

 

அத்துடன் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளதாக ஹீதர் நாவெர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக சீன தூதரகம் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், உடனடியாக பதிலடி கொடுத்துள்ளதை வரவேற்றுள்ள அமெரிக்கா
இந்த நடவடிக்கையின் மூலம் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon