Menu

டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் மரின் சிலிக் வெற்றி!!

டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றைவயர் பிரிவு போட்டியில் குரேஷியா நாட்டின் முன்னணி வீரரான மரின் சிலிக், வெற்றி பெற்றுள்ளார்.

 

டேவிஸ் கிண்ண தொடருக்கான போட்டிகள் தற்போது பிரான்சில் நடைபெற்று வருகின்றன.

 

இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில், குரேஷியாவின் முன்னணி வீரரான மரின் சிலிக், மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர் சொங்கா ஆகியோர் பலபரீட்சை நடத்தினர்.

 

பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், முதலாவது செட்டை 6-3 என்ற கணக்கில் மரின் சிலிக், கைப்பற்றினார்.

 

இரண்டாவது செட்டில், 7-5 என்ற கணக்கில் பிரான்ஸ் நாட்டு வீரர் சொங்கா போராடி கைப்பற்றினார்.

 

எனவே வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்பாக நடைபெற்றது.

 

இதில் 6-4 என மூன்றாவது செட்டைக் கைப்பற்றி மரின் சிலிக், வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon