Menu

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கல்விதுறையில் பரஸ்பரம் இந்திய ஜனாதிபதி.!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையில் கல்வித்துறையில் பரஸ்பர ஒத்துழைப்புகள் காணப்படுவதாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவுக்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் கல்வித் துறையில் கூட்டாளிகள்’ எனும் தொனிப்பொருளில் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இரு நாடுகளுக்கும் பல்வேறுபட்ட கலாசாரங்களை கொண்டிருப்பதுடன், கருத்து சுதந்திரத்துக்கு மரியாதை அளித்து வருவதாக ராம்நாத் கோவிந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஆங்கிலமொழி கூட இருநாடுகளையும் ஒன்றிணைப்பதாக தெரிவித்த ராம்நாத் கோவிந்த் கிரிக்கெட், மற்றும் ஹொக்கி ஆகிய விளையாட்டுகளிலும் இரு நாடுகளும் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

வேளாண்மை, கடல்சார் பாதுகாப்பு, மற்றும் தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக இருநாடுகளும் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தொழில்நுட்பத்திலும், மேம்பட்ட கல்வியிலும் சிறந்து விளங்குகின்ற காலகட்டத்தில் தற்போது வாழ்ந்து வருவதாக தெரிவித்த ராம்நாத் கோவிந்த்
கல்வி, ஆராய்ச்சி துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே சிறந்த நட்புறவு நிலவுவதாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

 

எனவே இந்த நிலை மேலும் தொடரவேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இந்தியாவுடன் ஆராய்ச்சி துறையில் சிறந்த நண்பனாக திகழும் முதல் 5 நாடுகளின் பட்டியலில், ஆஸ்திரேலியாவுக்கும் இடமுண்டு என்றும் ராம்நாத் கோவிந்த் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon