Menu

ஸ்காபுரோவில் தமிழர் ஒருவரை தேடும் பொலிசார்.!!

ஸ்காபுரோவில் இரண்டு பெண்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தாக்குதல் சம்பவமானது டான்ஃபோட் வீதி மற்றும் மக்கவன் வீதிக்கு அருகில் இடம்பெற்றிருந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.

 

சம்பவத்தின் போது யுவதி ஒருவரும் மற்றம் யுவதியின் தாயாரும் மிக கடுமையாக தாக்கப்பட்டுள்ள அதேவேளை 37 வயதான தாயார் உயிருக்கு ஆபத்தான் நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் 46 வயதுடைய தமிழர் ஒருவரை தேடிவருவதாக தெரிவித்த பொலிசார் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் இரண்டு பெண்களை தாக்கிவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் சந்தேகநபரின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளதுடன் தகவல் தெரிந்தே பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தள்ளனர்.

 

சந்தேக நபர் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த பொலிசார் மக்கள் அவதானமாக சந்தேக நபரினை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon