Menu

கனடாவில் தபால் ஊழியர்களின் போராட்டம் வெற்றி.!!

கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் சுழற்ச்சி முறையிலான பணி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

கடந்த சில வாரங்களாக கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக தபால் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைவாக போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தபால் ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர்கள் தொடர்பிலான சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 166 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே தபால் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் மீதான ஆய்வுகளை மேற்கொள்ள செனட் சபை இன்றும் நாளையும் கூடவுள்ளதாக கனேடிய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon