Menu

ஜனாதிபதி ஏற்காவிடின் போராட்டம் தொடரும் என்கிறார்..!!!

அமைதி பேச்சுவார்த்தையை ஜனாதிபதி ஏற்காவிடின் பிரச்சினை தீர்க்கப்படும்வரை போராட தாம் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 

பிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இந்த குழப்பமான சந்தர்ப்பத்தில் யாராவது ஒருவர் ஒரு பக்கத்தில் சமாதான கொடியை காட்டினால் அந்த பக்கம் தொடர்பில் கவனம் செலுத்த தான் தயார் என்றும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

தற்போது தாம் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த ராஜித சேனாரத்ன அதுபோல சமாதானத்திற்கும் முன்னிற்கபோவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கி, அவர் அமைக்கும் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வதே சிறந்தது என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஆகவே பிரச்சினையை தீர்க்க சபாநாயகர் தலையீடு செய்ய வேண்டும் எனவும் இதற்காகவே தாம் போராடுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon