Menu

ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சஜித் கருத்து.!!

சட்டப்பூர்வமான பிரதமர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன சட்டபூர்வமான பிரதமரின் கீழ் வருவதாக சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

 

தற்போது நாட்டின் சட்டபூர்வமான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என்று சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேவேளைஇ மகிந்த பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக அரசியல் யாப்பினையும்இ கட்சியின் தீர்மானங்களையும் மீறி செயற்பட முடியாது என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon