Menu

மைதிரியின் முடிவை எதிர்க்கும் மகிந்தவின் நட்பு.!!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவொன்றை எடுக்காத காரணத்தினால் முழு நாடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இன்றைய பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குமார வெல்கம இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொது ஜன பெரமுனவிற்கு மட்டுமல்ல முழு நாட்டையும் பாதிக்கும் பிரச்சினை இன்று தோன்றியுள்ளதாக குமார வெல்கம கவலை வெளியிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவொன்றை எடுக்காமையினால் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன நாடு மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய தேசிய முன்னணியை தோற்கடிக்க வேண்டுமாயின் போதுமானளவிற்கு வழிகள் உண்டு எனவும் உதாரணமாக தேர்தல் ஒன்று வந்தால் தேர்தலில் தோற்கடிக்கலாம் எனவும் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆனால் பலாத்காரமாக பெரும்பான்மை பலம் இல்லாது செய்யும் இந் நடவடிக்கைகளை ஒரு போதும் நான் ஆதரிக்க போவதில்லை என்றும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon