Menu

பிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.!!

பிரான்சில் கடந்த நான்கு வாரங்களாக இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டியது அவசியம் என பிரான்ஸ் நாட்டு பிரதமர் எடோல்ட் பிலிப்பி வலியுறுத்தியுள்ளார்.

 

பிரான்ஸ் நாட்டு மக்கள் தேசிய ஒற்றுமையினை கருத்தில் கொண்டு அதற்குரிய முறையில் செயல்படுமாறும் எடோல்ட் பிலிப்பி வேண்டுகொள் விடுத்துள்ளார்.

 

பிரான்சில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்து ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பெட்ரோல், மற்றும் டீசல் மீதான வரி உயர்வைக் கண்டித்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மஞ்சள் நிறத்திலான உடைகளை அணிந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த போராட்டம் இன்றும் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த அதேவேளை பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

பிரான்சின் தலைநகர் பாரீஸ் உள்பட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் வன்செயலாக மாறியதால் பல கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாடத்தின் மூலம் வெளிப்படுத்துபவர்களின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறும் என பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon